(லங்கா தமிழ் நியூஸ்.அக்டோபர்.19.2009. மு.ப.06.05) வடமேல் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மீது நுரைச்சோலையில் தாக்குதல்வடமேல் மாகாண சபையின் புத்தளம் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்.டீ.தாஹிர்இகல்பிட்டி பிரதேச சபையின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்
எம்.எச்.எம்.மின்ஹாஜின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதல் சம்பவமொன்றில் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நுரைச்சோலை சந்தைக் கட்டிட தொகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றினை முடித்துவட்டு நுரைச்சோலையிலிருந்து ஏத்தாளை நோக்கி செல்லும் போது நுரைச்சோலையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கல்பிட்டி பெலீஸார் தெரிவித்தனர்.
தாக்குதல்; சம்பவம் இடம் பெற்ற போது,வாகனத்தில் மாகாண சபை உறுப்பினர் இருந்த போதும்.அவர் தாக்குதலில் இருந்து தப்பித்ததாக பொலீஸார் தெரிவித்தனர்.அதே வேளை அவரது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் வாகானம் பலத்த சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கல்பிட்டி பொலீஸார் 3இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் தலைமறைவாகியுள்ளதாக கல்பிட்டி பொலீஸார் தெரிவித்தனர்.