(லங்கா தமிழ் நியூஸ்.அக்டோபர்.19.2009. மு.ப.06.05) இலங்கை வங்கியின் விரிவாக்கட் கிளையொன்று இன்று (19) தலைமன்னார் பியரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதனை திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அமைய வங்கி நடவடிக்கைகள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலாவது விரிவாக்கட் கிளை மன்னார் நானாட்டான்; கிராமத்தில் கடந்த மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இது இரண்டாவது கிளையாகும்.
இன்றைய ஆரம்ப வங்கி நடவடிக்கைகளின் போது முப்பது இலட்சம் ரூபா நிதி சேமிப்புக்களில் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.