ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், அமுல்படுத்தும் 'நெனச' செய்மதி தொலைகாட்சியாலமைந்த அதி தரம் வாய்ந்த தொலைக்கல்வி பாலத்தின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடு அனைத்தும் கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்றது. இலங்கை முழுவதும் அமைந்துள்ள 1000 பின்தங்கிய பாடசாலைகளை இணைக்கும் பாலமாக 'நெனச' அமைவதுடன் டிஜிட்டல் செய்மதி தொலைகாட்சி அலைவரிசையூடாய் ஒளிபரப்பப்படும் ஊடகமாக தேசிய கல்வி நிறுவகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உடன் இணைந்து கல்வி அமைச்சரான சுசில் பிரேமஜயந்த மொனறாகலையில் பின்தங்கிய பாடசாலை ஒன்றின் வகுப்பறையிலிருந்து இந்த ஒளிபரப்பை அமுல்படுத்தி வைத்தார். மொனறாகல, பெலாவத்தை றஞ்சன் மஹா வித்தியாலயத்தில் தரம் 9, 10 மற்றும் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழியினை திறந்து வைக்கும் வகையில் நடைபெற்ற 'நெனச'வின் இந்த அமுல்படுத்தல் தொடர்ந்தும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கை பூராவும் ஏறத்தாழ 500,000 மாணவர்களை சென்றடைய எதிர்பார்க்கப்படுகின்றது.
'நெனச' – கல்வி அமைச்சுக்கும் இலங்கையின் மாணவ சமுதாயத்துக்கும் டயலொக் டெலிகொம் பிஎல்சி இனால் வழங்கப்படும் ஒரு வரப்பிரசாதமாகும். இலங்கையின் பெருமைக்குரிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் சிறந்த தரம் வாய்ந்த செய்மதி தொலைகாட்சி சேவையை அறிமுகப்படுத்துகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை வளப்படுத்தும் நோக்கில் டயலொக் டெலிகொம்மினால் வழங்கப்படும் இந்த செயற்றிட்டமானது குழுமத்தினால் செயற்படுத்தப்படும் முற்றிலும் விளம்பர நோக்கமல்லாத முயற்சியாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த மாண்புமிகு ஜனாதிபதி, 'பின்தங்கியோரை வளப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாய் விளங்குவதில் மிக்க மகிழ்ச்சி. நம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் மஹிந்த சிந்தனையின் முக்கிய நோக்கமும் இதுவே. இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களை வளப்படுத்த எமது அரசாங்கம் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. புதிதாய் சுதந்திரம் கண்ட பிரதேசங்களான வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பின்தங்கிய வலயங்களிலும்; கல்வி வசதிகளை மேம்படுத்த விசேட கவனத்துடன் செயற்படுகின்றோம். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக்கான வருடமாக 2009 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இந்நேரம், 'நெனச' வளம்மிக்கதொரு நாளைய சமூகத்தை உருவாக்கும் வழியை திறந்து வைக்கின்றது. இலங்கை மக்களுக்கு ;நெனச' எனும் அதி பெறுமதி வாய்ந்த வரப்பிரசாதமான தொழில்நுட்பத்தை அமுல்படுத்துவதன் மூலம் அறிவுமிக்கதொரு நாளைய சமுதாயத்தை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணித்த டயலொக் டெலிகொம் இற்கு இவ்வேளை நாம் பாராட்ட வேண்டும்.' என்றார்.
தேசிய கல்வி நிறுவகத்;தினால் வடிவமைக்கப்படும் 'நெனச'இற்கான உள்ளடக்கமானது தெரிவு செய்யப்படும் 1000 பாடசாலைகளுக்கு குறித்த வலையமைப்பு மூலமாக டயலொக்கினால் இணைக்கப்படும். தமிழ் மற்றும் சிங்கள் மொழியில் அமைந்த பாடங்களை உள்ளடக்கமாக கொண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர மாணவர்கள் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி புகட்டும் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விசேட ஆற்றல்களை வளர்க்கும் வகையிலமைந்த நிகழ்ச்சிகளும் சேர்க்கப்படவுள்ளன. 'நெனச' வில் ஒளிபரப்பாகும் இந்த பாடநெறிகளை கல்வி முகாமைத்துவப்படுத்தும் முறைமை (LMS) வழங்கவுள்ளது. இந்த LMS ஆனது மாணவர்களை 'நெனச'வின் இணையதளமான www.nenasa.lk ஐ அணுகுவதற்கான அனுமதியை வழங்குவதுடன் அதிலிருந்து பாடநெறிகளை பதிவிறக்கம் செய்யக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது. LMS எனும் இந்த கல்வி முகாமைத்துவப்படுத்தும் முறைமையானது மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மொபைல் தொடர்பாடல் ஆய்வுகள் மேற்கொள்ளும் பரிசோதனை நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட ஒன்றாகும். இந்த செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இதற்கு தேவையான தொலைகாட்சி சாதனங்கள் மற்றும் ஒளி ஒலி சாதனங்களை பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளது. நெனச வலையமைப்புக்குள் இணைக்கப்படவிருக்கும் இத்தகைய பாடசாலைகளை கல்வி அமைச்சு அடையாளம் காணவுள்ளது.
இது பற்றி கூறிய டயலொக் டெலிகொம் பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய, 'நெனசவின் மூலம் கல்வியை பின்தங்கிய பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்ல உந்துசக்தியாய் அமைந்த மாண்புமிகு ஜனாதிபதி, கல்வி அமைச்சர் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன். இலங்கையின் எதிர்கால சந்ததியினரை வளப்படுத்தி அறிவூட்டும் இத்தகையதொரு மாபெரும் கல்வி நிகழ்ச்சியை கொண்டு செல்வதை முன்னிட்டு பெருமையும் திருப்தியும் அடைகின்றோம். இலங்கை மக்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாக எம்மை அர்ப்பணித்துள்ளோம். அந்த வகையில் இலங்கையின் டிஜிட்டல் தொலைகாட்சி அடிப்படையில் அமைந்த கல்வி பாலத்தை அமுல்படுத்துவதில் கல்வி அமைச்சுடன் இணையும் ஆரம்பப்பங்காளராய் விளங்குவதில் பெருமையடைகின்றோம்.' என்று குறிப்பிட்டார்.
டயலொக் டெலிகொம் பிஎல்சி பற்றி
ISO 9001 சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனமான டயலொக் டெலிகொம் பி.எல்.சி, ஆசியாட்டா குழுமம் பெர்ஹாட்டின் (முன்னர் TM சர்வதேசம் Berhad குழுமம் என அறியப்பட்டது) துணை நிறுவனமாகும். அதிநவீன பல்லூடகம் மற்றும் செல்லிட இணைய சேவைகளுக்கு ஆதரவு வழங்கும் 2.5G மற்றும் 3G/3.5G HSDPA தொடர்பாடல் வலையமைப்பை டயலொக் செயற்படுத்துகின்றது. வர்த்தக ரீதியாக செயற்பாடுகளை ஆரம்பித்த தெற்காசியாவின் முதலாவது 3G சேவை வழங்குநர் என்ற பெருமையையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது. அதன் தேசிய வலையமைப்பு சேவை சகல மாகாணங்களிலும், சர்வதேச றோமிங் சேவை 200ற்கும் அதிகமான நாடுகளிலும் வழங்கப்படுகின்றது.
இலங்கையின் மிகப் பெரியதும் மிகவேகமாக வளர்ந்து வருவதுமான டயலொக் டெலிகொம் பி.எல்.சி, 5.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தனது சிறந்த சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
..................................................................................................
உங்கள் மொபைலின் ‘இன்-பாக்ஸ்’ஐ பாதுகாக்கும் பூட்டு ! அறிமுகப்படுத்துகிறது டயலொக்
------------------------------------------
இலங்கையிலேயே முதன்முறையாக, உங்கள் செல்லிடப்பேசிகளில் உள்ள குறுந்தகவல்களை (எஸ்.எம்.எஸ்) பாதுகாக்கக்கூடிய ஒரு பயன்பாட்டை டயலொக் டெலிகொம் அறிமுகப்படுத்துகின்றது. ‘லொக்ட் எஸ்.எம்.எஸ்’ (Locked SMS) என ஆங்கிலப் பெயர் இடப்படிருக்கும் இந்த புதிய பயன்பாடானது உங்கள் தகவல்கள் பெட்டகத்தில் (மெசேஜ்-பாக்ஸ்) உள்ள எஸ்.எம்.எஸ் களை ஒரு இரகசியக் குறியீட்டின் மூலம் பாதுகாக்க வழிகோலுகின்றது.
உரிய இரகசியக் குறியீட்டை உறுதிபடுத்துவதன் மூலம் மட்டுமே இவ்வாறு பூட்டப்பட்ட எஸ்.எம்.எஸ் களை பார்க்கவோ, அனுப்பவோ முடியும். இதனால் அனைவரும் தமது சொந்த விடயங்களில் ஏனையோரின் தலையீடு பற்றிய கவலையின்றி, தங்கள் செல்லிடப்பேசிகளை நண்பர்களிடம் கொடுக்கலாம். இந்த பயன்பாட்டில் மேலும் பல பாதுகாப்பு அம்சங்களும் காணப்படுகின்றன. தமக்கென்று ஒரு தனிப்பட்ட பெட்டகத்தை (பர்சனல் போல்டர்) உருவாக்கி அதனை பல இரகசியக்குறியீடுகள் மூலம் கட்டுப்படுத்தமுடிகின்றதான ஒரு அம்சம் இவற்றுள் ஒன்றாகும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் இந்த பயன்பாடானது தானியங்கியாக பூட்டப்பட்டு இரகசியக் குறியீட்டின் உறுதிபடுத்தலின் பின்னரே மீண்டும் திறக்கப்படும்.
‘லொக்ட் எஸ்.எம்.எஸ்’ பயன்பாட்டை பாவிக்க எந்தவிதமான முன்கூட்டிய பதிவுகளும் தேவையில்லை. இந்த சேவையை பெற விரும்பும் டயலொக்கினது எந்தவொரு முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைப்பு வாடிக்கையாளரும் ‘LOCK’ என டைப் செய்து 678க்கு எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் குறித்த பயன்பாட்டை பெற்று தமது செல்லிடப்பேசிகளுக்கு பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம். இதற்கு GPRS இணைப்பு கட்டாயமாக தேவை. டயலொக்கின் லொக்ட் எஸ்.எம்.எஸ் இனை பயன்படுத்தி அனுப்பப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் அனைத்து எஸ்.எம்.எஸ் களும் சாதாரணமாக குறுந்தகவல்களுக்கு அறவிடப்படும் கட்டண அடிப்படையிலேயே அறவிடப்படும்.
கடந்த சில வருடங்களாக டயலொக் டெலிகொம்மானது அதன் வாடிக்கையாளர்களுக்கென தொல்லையற்ற மொபைல் பாவனையை வழங்குவதற்கேற்ற வகையில் புதுப்புது பயன்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. ‘பிளொக்;ட் எஸ்.எம்.எஸ்’ (Blocked SMS) எனும் தேவையற்ற தொலைபேசி இலக்கங்களிலிருந்து உள்வரும் தொல்லை தரும் எஸ்.எம்.எஸ் களை தடை செய்யக்கூடிய பயன்பாடு இவற்றுள் குறிப்பிடத்தக்கது.
டயலொக் டெலிகொம் பிஎல்சி ஐப் பற்றி
ISO 9001 சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனமான டயலொக் டெலிகொம் பி.எல்.சி ஆனது, ஆசியாட்டா குழுமம் பெர்ஹாட்டின் (முன்னர் TM சர்வதேசம் Berhad குழுமம் என அறியப்பட்டது) துணை நிறுவனமாகும். அதிநவீன பல்லூடகம் மற்றும் செல்லிட இணைய சேவைகளுக்கு ஆதரவு வழங்கும் 2.5G மற்றும் 3G/3.5G HSDPA தொடர்பாடல் வலையமைப்பை டயலொக் செயற்படுத்துகின்றது. வர்த்தக ரீதியாக செயற்பாடுகளை ஆரம்பித்த தெற்காசியாவின் முதலாவது 3G சேவை வழங்குநர் என்ற பெருமையையும் இந் நிறுவனம் கொண்டுள்ளது. அதன் தேசிய வலையமைப்பு சேவை சகல மாகாணங்களிலும், சர்வதேச றோமிங் சேவை 200ற்கும் அதிகமான நாடுகளிலும் வழங்கப்படுகின்றது. இலங்கையின் மிகப் பெரியதும் மிகவேகமாக வளர்ந்து வருவதுமான டயலொக் டெலிகொம் பி.எல்.சி, 5.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தனது சிறந்த சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------

LEARN TV – கல்வியின் புரட்சிகரம் மிக்க பரிமாணம்
LEARN TV இலங்கையின் முதன்முதலான 24மணி நேர கல்வி பயிற்றுவிக்கும் தொலைகாட்சி சேவையை அறிமுகப்படுத்தி டயலொக் டிவி மற்றும் தர்மவாஹினி இணைந்து இலங்கையின் நாளைய தொழிநுட்பத்துடன் கூடிய வளம் மிக்க எதிர்காலத்தை வடிவமைத்திருக்கின்றது.
கல்வி அமைச்சின் உதவியுடனும் தர்மவாஹினியின் தயாரிப்பு மற்றும் தொகுப்பில் வடிவமைக்கப்படும் இந்த தொலைகாட்சி சேவையானது உங்கள் வீட்டிற்கே வருகை தந்து கல்வி புகட்டும் ஆசிரியராக இருப்பதோடு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மட்டத்திலுள்ள மாணவர்களை சகல பாடதிட்டங்களிலும் அறிவூட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டத்துக்குமான நேர ஒதுக்கீடாக 40 நிமிடங்கள் வழங்கப்படுவதுடன் பாடசாலைக்கு நிகரான பாடவேளைகளை கொண்ட வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி டயலொக் டிவி, பிரதம நிறைவேற்று அதிகாரி நுஷாட் பெரேரா, “கல்விக்கான விளக்கத்தை இலகுபடுத்தும் புரட்சிகரமான முறையே
LEARN TV இன்றைய கல்வியில் பிரத்தியேக வகுப்புகள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றது. இந்த வசதி அனைத்து பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதொன்றல்ல. இந்த இடைவெளியை பூர்த்தி செய்வதோடு மாணவர்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் தீர்வாக டுநுயுசுN வுஏ அமைகின்றது. அந்த வகையில் இம்முதல் முயற்சியை செயற்படுத்த எமக்கு அனைத்து விதத்திலும் உதவிய கல்வி அமைச்சு மற்றும் அலுவலகத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். நாட்டின் கல்வி மட்டத்தை தேசிய ரீதியில் தரமுயர்த்தும் தாகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.” என்று தெரிவித்தார்.
70க்கும் மேற்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் கணிதம், ஆங்கிலம், வரலாறு, விஞ்ஞானம், சமயம், ஆங்கில இலக்கியம், வணிகம் மற்றும் பல இந்த தொலைக்காட்சியில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இதன் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சம் வடிவில் கல்வி புகட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் அமைச்சர் மதிப்புக்குரிய சுசில் பிரேமஜயந்த இது பற்றி கூறுகையில், “டயலொக் மற்றும் டுநுயுசுN வுஏ தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் ஒன்றாக அமைகின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நம் தேசத்தின் ஒவ்வொரு மாணவனையும் கல்வி சென்றடையும் தகுந்த வழிவகைகளை நாம் பிறப்பிக்க வேண்டும். இவ்வகையான ஒரு காரணிக்கு நவீன தொலைகாட்சி தொழிநுட்பத்தை எவ்வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு LEARN TV ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்தவகையில் இத்தகைய ஒரு இலக்கை நிறைவேற்ற டயலொக் மற்றும் தர்மவாஹினி எடுத்து வரும் முயற்சிகளை பாராட்ட வேண்டியதோடு இந்த நிகழ்வை வெற்றிகரமாய் மாற்ற பாரிய ஆதரவு கொடுத்த கல்வி அமைச்சுக்கும் பாராட்டு சேர வேண்டும்.” என்றார்.
LEARN TV 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பாடவேளைகளையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லமுடியாத மாணவர்களுக்கு புதிதாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைகாட்சி நிகழ்ச்சி நிரல் நிச்சயம் தோள் கொடுக்கும் என்பதை தர்மவாஹினி தலைவர் பேராசிரியர் அசங்க திலகரத்ன உறுதிபடுத்துகின்றார். இந்த வாய்ப்பினை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் ரூ. 100 மாத கட்டணத்திற்கு டயலொக் டிவி இனூடாக
LEARN TV ஐ பெறலாம்.
-----------------------------------------------------------------
இப்போது விமானத்துக்குள் இருந்தவாறே கையடக்கத்தொலைபேசியை பாவிக்கலாம் டயலொக் வாடிக்;கையாளர்கள் மட்டற்ற மகிழ்ச்சி
-----------------------------------------------------------------

“பிரம்மிப்பூட்டும் தொழிநுட்பம், அதி சிறந்த சேவை, என்பன கொண்ட உள்ளக விமானத்திலிருந்து தொடர்பாடல் மேற்கொள்ளும் வசதி எமது வாழ்க்கையை மேலும் இலகுபடுத்தியுள்ளது. எனது சக தோழர்களான வியாபார பங்காளிகளுக்கு நான் இதை ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டேன்.” என்றார் எஸ். எம் ரஃபீக். கட்டார் ஹோஸ்பிட்டல்ஸில் பணி திட்ட முகாமையாளராக பணியாற்றும் இவர் விமானத்துக்குள் இருந்தவாறே கையடக்கத்தொலைபேசிகளை பாவனை செய்யக்கூடிய சேவையை அனுபவித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த சேவையானது டயலொக் டெலிகொம் நிறுவனம் ஏரோமொபைலுடன் கூட்டிணைந்ததன் பலனாய் உருவாகியுள்ளது.
இந்த சேவையை வழங்குவதில் முன்ணனி வழங்குநராக விளங்கும் ஏரோ மொபைலானது கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இதனை எமிரேட்ஸ் விமானத்தில் செயற்படுத்தி முதன்முதலாக உத்தியோகபூர்வமாக விமானத்தினுள் கையடக்கத்தொலைபேசியை பாவனை செய்யும் வசதியை பெற்ற பெருமையை பெறுகின்றது. ஏரோமொபைலுடனான டயலொக்கினது கூட்டிணைவானது அதன் வாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளை தெரிவுசெய்யப்பட்ட விமானங்களினுள் பாதுகாப்பாக கையாள வழிகோலுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு விமானத்தினுள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தும் உரிமையை வழங்கும் இலங்கையின் முதல் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் என்ற பெருமையை டயலொக் பெறுகின்றது. இந்த புதிய தொழில்நுட்பமானது பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு அவர்கள் விமானம் மூலம் பயணங்களை மேற்கொள்ளும் அதே நேரம் தமது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வர்த்தகப்பங்காளிகளுடன் தொடர்புகொள்ளும் வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றது.
இந்த தொடர்பாடல் சேவையானது பயணிகள் விமானத்துக்குள்ளிருந்தவாறே அழைப்புக்கள் ஏற்படுத்தவும் பெற்றுக்கொள்ளவும் ஏதுவாயிருப்பதுடன் குறுந்தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் வழியமைத்துக்கொடுக்கின்றது. இந்த தொழிநுட்பமானது விமானம் நிர்ணயிக்கப்பட்ட பயண உயரத்தை அடைந்தவுடனேயே தன்னியக்கமாக செயற்பாட்டுக்கு வரும். இந்த சேவையை பயன்படுத்தவிரும்பும் பயணிகள் தமது செல்லிடப்பேசிகளை ‘ஓன்’ செய்தவுடனேயே ஏரோமொபைலிடம் இருந்து ஒரு வரவேற்பு தகவலை பெறுவர்.
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தின் பல்கலைக்கழக மாணவரான காதிர் சஹித் இந்த சேவை பற்றி கூறுகையில் “இது மிகவும் உபயோகரமானதாகவும் வசதியானதாகவும் உள்ளது. எல்லைகளை தடையாய் கொள்ளாமல் எமது நண்பர்களையும் உறவுகளையும் தொடர்பில் வைத்திருக்கக்கூடிய இந்த கைக்கடக்கமான தொழிநுட்பம் மிகவும் பயன்பாடுள்ளது.” என்று தெரிவித்தார்.
டயலொக் மற்றும் ஏரோமொபைல் இணைந்து இந்த சேவைக்கு தரவுப் பயன்பாடு உள்ளிட்ட மேலும் பல இணைக்கப்பட்ட சலுகைகளையும் அம்சங்களையும் சேர்ப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றது. டயலொக்கினது றோமிங் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏற்கக்கூடிய கட்டணங்களுக்கு இதனை பெற்றுக்கொள்ளக்கூடியதாய் இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
டயலொக் குளோபல் இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அனோஜா ஒபேயசேகர “விமானத்துக்குள்ளிருந்தவாறான தொடர்பாடல் வசதியை வழங்குவதில் ஏரொமொபைலுடன் டயலொக் இணைவதையிட்டு பெரு மசிழ்ச்சி அடைகின்றோம். இந்த புதிய முயற்சியானது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்திக்கொடுக்க முனையும் எமது அர்ப்பணத்தின் ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த கூட்டிணைதல் மூலம் எமது வாடிக்கையாளர்கள் பல சலுகைகளை பெறுவதுடன் உலகத்தை சுற்றி வரும் அதே நேரம் அதி வளமான தொடர்பாடல் அனுபவத்தையும் பெறுவர் என்பது உறுதி.” என்று கூறினார்.
இந்த கூட்டிணைதல் குறித்து ஏரோமொபைல் பிரதம விளம்பரப்படுத்தல் அதிகாரி கூறுகையில் “உலகம் முழுதும் உள்ள மக்களை அதி தரம் வாய்ந்த உள்ளக விமானம் தொடர்பாடல் வசதியுடன் இணைக்கும் எமது முயற்சிக்காய் டயலொக் டெலிகொம் உடன் கரம் கோர்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இது எவ்வித சந்தேகமுமின்றி வான் வழி பயணிகளை அவர்களை சார்ந்தோருடன் இணைக்கும் தொடர்பாடல் பாலமாய் அமைவதோடு, அதிகரித்துச் செல்லும் விமான உள்ளக தொடர்பாடல் சேவைகளுக்கான ஒரு தனித்துவ தீர்மானமாகவும் அமையும்.” என்றார்.
ஐக்கிய இராச்சியத்தை தள நிறுவனமாக கொண்ட ஏரோமொபைல் லிமிட்டட் நிறுவனமானது Telenor ASA இனால் பெரும்பாலும் உரித்தாக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் சந்தை கேள்விக்கேற்ப 2003 ஆம் ஆண்டு முதல் விமானப் பயணிகளின் பாதுகாப்பான கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் சுய தொழில்நுட்ப உதவிகளை வடிவமைத்தும் விருத்திசெய்தும் வருகின்றது.
மேலதிக தகவல்களுக்கு www.aeromobile.com இணையதளத்தை அணுகவும்